நீர்க்கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சில பிரதேசங்களில் எதிர்வரும் 2020.01.06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மறுநாள் (07) காலை 9 மணி வரை 24 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர்க்கொழும்பு பம்புகுளிய நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்தின் ஊடாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை பெற்றுக் கொடுப்பதற்காக மின்சார ஜெனரேட்டர் ஒன்றை பொருத்தும் பணிகள் காரணமாக இது மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்க்கொழும்பு மாநகர சபைக்குற்பட்ட பிரதேசம், கொச்சிக்கடை, தூவ, பிடிபன, துன்கால்பிட்டிய, பாசியாவத்த, பமுனுகம பிரதேசம், கடான அதிகாரத்திற்குற்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கட்டுநாயக்க விமான படை முகாம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.