Tuesday, October 27, 2020

Latest Posts

விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன்!

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்தியில்...

கஞ்சா வாங்கியபோது போலீசிடம் சிக்கிய நடிகை!

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும், மரணமடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைதானார். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா...

மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

மத்திய பிரதேசத்தின் சியோனியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 15 கி.மீ....

கொரோனா தொற்று : இந்தியாவில் நாளொன்றிற்கான பாதிப்பு வெகுவாக குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி நேற்று ஒரேநாளில் 36 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து...

உலகிலேயே முதலில்தோன்றிய கோவில் எது தெரியுமா?

இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த அற்புத பூமியும் இதுதான்.

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது.

ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.

அதே போல ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் முடிந்த பின்னர், புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தனர். அப்போது ராவணனின் வழிகாட்டு தலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார்.

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கும், முன்னரே தோன்றிய ஆலயம் இது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம்.

உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும். ‘திரு’ என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். ‘உத்திரம்’ என்பதற்கு ரகசியம் என்றும், ‘கோசம்’ என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும்.

அம்பாளுக்கு ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் அடங்கிய ஆயிரவருக்கும், பிரணவப் பொருளை இங்கு இறைவன் உபதேசித்து உள்ளார்.

இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன.

மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் ‘மங்களநாதர்’ ஆனார்.

மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தாள். பரிவு கொண்ட சிவபெருமான், அவளுக்கு புத்திரப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கைக்கு எழுந்தருள எண்ணினார்.

அதற்கு முன்பாக தன் அடியார்கள் ஆயிரவர்களிடம், ‘எனது திரு மேனியை ராவணன் தீண்டும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் எழுந்தருளிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு குழந்தையாக உருவெடுத்து வரமளித்தார்.

அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைப் பார்த்து, அதனை தன் கைகளால் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தான். ராவணன் தீண்டியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக் குளத்தில் அக்னி வளர்ந்தது. பிரணவப் பொருளை உபதேசம் பெற்ற ஆயிரவரும் அந்த அக்னியில் இறங்கி கயிலாயம் சென்றனர்.

ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து அருள்பாலித்தார். இந்த ஆயிரவரும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனோடு கலந்து விட்டனர். அதனை இங்குள்ள சகஸ்ர லிங்கத்தில் காணலாம்.

திருக்கோவில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் கோவில் கொண்டுள்ள மாணிக்கவாசகர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது.

வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.

அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

Latest Posts

விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன்!

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்தியில்...

கஞ்சா வாங்கியபோது போலீசிடம் சிக்கிய நடிகை!

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும், மரணமடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைதானார். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா...

மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

மத்திய பிரதேசத்தின் சியோனியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 15 கி.மீ....

கொரோனா தொற்று : இந்தியாவில் நாளொன்றிற்கான பாதிப்பு வெகுவாக குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி நேற்று ஒரேநாளில் 36 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து...

Breaking News

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை...

கிளிநொச்சிஉதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவருக்கு கொரோனாதொற்று உறுதி!

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களில் ஒருவர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரியான பெண் ஊழியர் ஒருவரின் மகன்...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக்கூட்டத்திலிருந்து முஷாரப் வெளியேற்றம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலிருந்து, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக்...

நாட்டை முடக்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்...

Don't Miss

விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன்!

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்தியில்...

கஞ்சா வாங்கியபோது போலீசிடம் சிக்கிய நடிகை!

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும், மரணமடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைதானார். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா...

மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

மத்திய பிரதேசத்தின் சியோனியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 15 கி.மீ....

கொரோனா தொற்று : இந்தியாவில் நாளொன்றிற்கான பாதிப்பு வெகுவாக குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி நேற்று ஒரேநாளில் 36 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து...

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர்...