Thursday, December 3, 2020

Latest Posts

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...

மஹிந்தவுடன் 13ஐ பற்றி மோடி பேசியதன் பின்னணி இதுதானா?

கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் மெய்நிகர் உச்சி மகாநாடு ஒன்று நடந்திருக்கிறது. ராஜபக்ஷக்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய பின்னர் நடந்த முதலாவது உயர்மட்ட உச்சி மகாநாடு இது.

இச்சந்திப்பில், இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைக் குறித்தும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் குறித்தும் பேசியிருக்கிறது. இவற்றுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்தம் தொடர்பான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு என்று இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு மானியமாக வழங்கவுள்ளது.

இதில், ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த விடயம் 13ஆவது திருத்தம். பதின்மூன்றாவது திருத்தம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் எஞ்சியிருக்கும் ஒரே பதாங்க உறுப்பு. இந்தத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியா கேட்டிருக்கிறது.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் பேசிய பொழுது, மஹிந்த ராஜபக்ஷ அதை பதில் ஏதும் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பாக சிங்கள அறிக்கையில் அது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.

அதேசமயம், இந்திய வெளியுற அமைச்சு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் அதுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உச்சி மாநாட்டுக்குப் பின்பு இரு தரப்பும் இணைந்து உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்னர் அரசாங்கம் சிங்கள மக்களுக்கு ஒரு தனி அறிக்கை வெளியிட்டிருப்பது இராஜதந்திர வழமைக்கு முரணானது.

அத்தோடு, மோடி பதின் மூன்றாவது திருத்தம் பற்றி என்ன கதைத்தவர் என்று ஊடகங்கள் கேட்டபோது, தான் அதை மறந்துவிட்டதாக மஹிந்த பகிடியாகச் சொல்லியுமிருக்கிறார்.

மேற்படி உச்சி மகாநாடு இரண்டு நாட்டின் பிரதமர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆனால் இலங்கைத் தீவின் அரசியலமைப்பின்படி இப்பொழுது நாட்டின் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான்.

ஆனால், அவரோடு இந்த உச்சி மகாநாடு நடக்கவில்லை. இந்திய பிரதமர் மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோடுதான் பேசினார். இதற்குள் ஏதும் செய்தி உண்டா?

நிறைவேற்று அதிகாரமுடைய அவருடைய சகோதரரைத் தவிர்த்துவிட்டு மூத்தவரான மஹிந்தவை அழைத்துப் பேசியதன் பின்னணி என்ன? இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

முதலாவது, அரசாங்கத்தில் கோட்டாபய அதிகாரம் மிக்கவராகக் காணப்பட்டாலும் நடைமுறையில் கட்சிக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும் ஜனவசியம் மிக மூத்த பெருந் தலைவராக மஹிந்தவே காணப்படுகிறார். எனவே அவருக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அவரை அழைத்திருக்கலாம்.

இரண்டாவது காரணம், கோட்டாபய ராஜபக்ஷவும் அவருடைய அணியைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக கோட்டாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்னிருந்து தீர்மானிக்கும் சக்தி என்று கருதப்படும் வியத்மக என்று அழைக்கப்படுகின்ற சிந்தனைக் குழாமும் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக காணப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

குறிப்பாக, தனது முதலாவது இந்திய விஜயத்தின் பின்பு கோட்டாபய இந்தியாவில் வைத்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த மாட்டேன் என்று கூறிவிட்டே நாடு திரும்பினார்.

அதாவது, காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் மாகாண சபைகளுக்கு வழங்கப் போவதில்லை என்று அவர் இந்தியாவில் வைத்துக்கூறினார். இதில் அவர் இந்தியாவுக்கு ஒரு செய்தியை உணர்த்த முற்பட்டார்.

ஆனால், இப்பொழுது அவரைத் தவிர்த்து மஹிந்தவை பேச அழைத்ததன் மூலம் இந்தியா கோட்டாபயவுக்கு ஏதும் செய்தியை உணர்த்த முயற்சிக்கின்றதா?

மூன்றாவது காரணம், 20ஆவது திருத்தமாகும். 20ஆவது திருத்தத்திற்கான முன்வரைபானது ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மையை வெளிப்படுத்தி இருக்கிறதா என்ற கேள்வி பரவலாக உண்டு. நாட்டை இப்பொழுது ஒரு சிந்தனைக் குழாமே அல்லது வியத்மக அமைப்பே வழி நடத்துகிறதா என்று கேட்கப்படுகிறது.

20ஆவது திருத்தத்துக்குரிய நகல் வரைபை வியத்மக அமைப்பே உருவாக்கியதாக நம்பப்படுகிறது. அதற்கு எதிராக மஹிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்புக் காட்டியதன் விளைவாக மகிந்த ராஜபக்ஷ அது தொடர்பான மீளாய்வுக்கு ஏழு பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.

இக்குழுவின் ஆலோசனைகளை உள்ளடக்கி திருத்தப்பட்ட முதல் வரைபே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என்று முன்பு கூறப்பட்ட போதிலும் வியத்மகவின் முதல் வரைபே மாற்றங்கள் எவையுமின்றி அரச வர்த்தமானியில் தொடர்ந்தும் காணப்படுகிறது.

எனவே, இது விடயத்தில் வியத்மகவின் கை மேலோங்கி இருக்கிறதா? அல்லது தம்பியை அண்ணன் அனுசரித்துப் போகிறாரா என்ற கேள்வி முக்கியமானது. இப்படிப்பட்ட கேள்விகளின் மத்தியில் மஹிந்தவையே தான் அங்கீகரிப்பதாகக் காட்ட இந்தியா முயற்சிக்கின்றதா?

எனவே, பதின்மூன்றாவது திருத்தத்தை ஒரு பிடியாக வைத்துக்கொண்டு இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் மீது தன் செல்வாக்கைப் பிரயோகிக்க எத்தணிகின்றது என்பதனைத்தான் கடந்த வார நிகழ்வுகள் நிரூபிக்கின்றனவா?

அதுமட்டுமல்ல, இதில் ஆகப் பிந்திய மற்றொரு விடயமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இந்தியா ஒரு கலாசார மண்டபத்தைக் கட்டி முடித்திருக்கிறது. இந்தக் கலாசார மண்டபத்தை முதலில் யாழ். மாநகர சபையிடம் கையளிப்பதாக இருந்தது.

ஆனால், யாழ். மாநகர சபையிடம் அதை நிர்வகிக்கத் தேவையான நிதி பலமும் இல்லை, ஆட்பலமும் இல்லை, துறைத் தேர்ச்சியும் இல்லை என்ற காரணங்களை முன்வைத்து அக்கட்டிடம் இப்பொழுது மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இதுபோன்ற மற்றொரு கலாசார மண்டபத்தை இந்தியா முல்லைத்தீவிலும் கட்டிக்கொடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கலாசார மண்டபத்தின் விடயத்திலும் அது தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை இந்தியா எப்படிப் பார்க்கிறது?

இவ்வாறானதொரு அரசியல் பின்னணியில் தான் ராஜபக்ஷக்களின் மீது ஏதோ ஒரு விதத்தில் தனது செல்வாக்கைப் பிரயோகிப்பதற்கு இந்தியா முயற்சிக்கிறது. அதற்கு 13ஆவது திருத்தத்தை ஒரு துருப்புச் சீட்டாக அவர்கள் பயன்படுத்தக் கூடும்.

ஆனால், நடைமுறையில் 13ஆவது திருத்தம் என்ற ஒன்று நாட்டில் அமுலில் இல்லை. அதன் வெற்றுடல்தான் அமுலில் உள்ளது. கடந்த 33 ஆண்டுகளாக அது தேய்ந்துகொண்டே வந்தது. காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வரும் சிங்கள ஜனாதிபதிகள்  மாகாணத்தின் அதிகாரங்களை எப்படி மத்திக்கு பிடுங்கிக் கொள்ளலாம் என்றே சிந்தித்து வந்திருக்கிறார்கள். அதை அவர்கள் மிகவும் தந்திரமாக செயற்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இப்போதிருக்கும் மாகாணக் கட்டமைப்பானது ஒரு கோறையான அமைப்பு. அந்தக் கோறையான உடலுக்கு மறுபடியும் உயிர் கொடுப்பது என்றால் அதற்கு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நிலையில் இந்தியா இருக்கிறதா?

மோடிக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில்  மறவன்புலவு சச்சிதானந்தம், அதாவது ஈழத்து சிவசேனையின்  தலைவர்  ஒரு சிறு ஊர்வலத்தை நடத்தியிருக்கிறார்.

இந்து மதத்தின் பிரதிநிதியாக தன்னை அறிவித்துக் கொண்டு பௌத்த மதத்தின் பிரதிநிதியாக ஒரு பௌத்த பிக்குவையும் இணைத்துக் கொண்டு பசு பாதுகாப்புச் சட்டத்தைக்கோரி  அந்த சிறு ஊர்வலம் நடத்தப்பட்டது. காலிமுகத்திடல் சங்கரில்லா விடுதிக்கு எதிரே தொடங்கிய ஊர்வலம் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு முன்பு முடிவடைந்தது.

சில வாரங்களுக்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷ, இறைச்சிக்காக மாட்டை கொல்வதைத் தடை செய்யப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி விட்டதாகச் செய்திகள் வெளிவரும் ஒரு பின்னணியில் இப்பொழுது மறவன்புலவு சச்சிதானந்தம் பசுக்களைக் காப்பாற்றப் போவதாகக் கூறிக்கொண்டு ஒரு பிக்குவோடு ஊர்வலம் செய்திருக்கிறார். அதுவும் இந்திய-இலங்கை உச்சி மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாள்.

உச்சி மாநாட்டுக்கு பின்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மதம் சார்ந்த உறவுகளை பலப்படுத்துவதற்கு என்று கூறி இந்தியா இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது. அத்தோடு, இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்று தெரிய வருகிறது. இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு மத ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உதவிகளை வழங்கி தன்னுடைய செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வரலாமா என்றுதான் சிந்திக்கின்றதே தவிர அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை இன்னமும் உருவாகவில்லை என்பதுதான்.

அப்படி அழுத்தங்களைப் பிரயோகிக்க வெளிக்கிட்டால் அது ராஜபக்ஷக்களை மேலும் சீனாவை நோக்கி உந்தித் தள்ளும் என்று இந்தியா அஞ்சக் கூடும். இந்த அச்சந்தானே ராஜபக்ஷக்களின் பேர பலம்?

Latest Posts

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...

Breaking News

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...

கிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை!

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை!

நாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...

Don't Miss

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...

கொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூட்டு

கொலன்னாவை தபால் நிலையத்தில் பணிபரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலன்னாவை தபால் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06...