Wednesday, January 20, 2021

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

நினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்..!!

நீதிமன்றமும் பொலிசும் அரசின் உபகரணங்களே. ஆனால், அவை அரசியல் தீர்மானத்தை எடுக்கும் உபகரணங்கள் அல்ல. அரசின் மற்றொரு உபகரணம் ஆகிய அரசாங்கமே அதாவது மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அல்லது நிறைவேற்று அதிகாரமுடைய அரசுத் தலைவரே அரசியல் தீர்மானங்களை எடுக்கலாம்.

அந்த அரசியல் தீர்மானங்களை நீதிமன்றம், பொலிஸ் உட்பட ஏனைய தனது திணைக்களங்களுக்கு ஊடாக அரசாங்கம் செயற்படுத்தும். நினைவு கூர்வதைத் தடைசெய்யும் தீர்மானம் எனப்படுவது ஓர் அரசியல் தீர்மானம். அரசாங்கமே அந்தத் தீர்மானத்தை எடுத்தது.

அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அது தனது உபகரணம் ஆகிய பொலிஸ் தரப்புக்கூடாக நீதிமன்றத்தை அணுகி நினைவு கூர்தலுக்கு எதிரான சட்டத் தடைகளை ஏற்படுத்தியது.

தியாகி திலீபனின் நினைவு நாளில் அவர்கள் அதைத்தான் செய்தார்கள். இப்பொழுதும் மாவீரர் நாளையொட்டியும் அவர்கள் அதைத்தான் செய்ய முயல்கிறார்கள். அதற்கு எதிராக தமிழ் தரப்பு என்ன செய்யப் போகிறது?

இதுவிடயத்தில் மணிவண்ணனும் கேசவன், சயந்தனும் யாழ்.மேல் நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தற் சட்டத்தின் கீழ் நினைவு கூர்தலைத் தடுக்கக் கூடாது என பொலிஸ் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி யாழ். மேல் நீதிமன்றத்தில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்களைத் தாக்கல் செய்தார்கள்.

ஆனால், நீதிமன்றம் அதை விசாரிப்பதற்கு தனக்கு நியாயாதிக்கம் இல்லை என்று கூறியுள்ளது. ஏனெனில், இது தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆயின் தமிழ் தரப்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

விவகாரத்தை நீதிமன்றம், பொலிஸ் என்ற தளத்தில் வைத்து அணுகினால் அது தொடர்ந்தும் ஒரு சட்ட பிரச்சினையாகவே இருக்கும். அங்கே, சட்ட இடைவெளிகளைப் பார்த்து சமயோசிதமாக முடிவுகளை எடுத்தால் மட்டுமே நினைவு கூர்தலை அனுஷ்டிக்கலாம் என்றே தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பதாகத் தெரிகிறது.

திலீபனின் நினைவு நாளில் அதைத்தான் தமிழ் கட்சித் தலைவர்கள் செய்தார்கள். நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்படாத சாவகச்சேரி பிரதேசத்தைத் தெரிந்தெடுத்து முன்னறிவித்தல் இன்றி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அங்கே கூடினார்கள். அதன்மூலம், அவர்கள் திலீபனின் நினைவு நாளை ஒப்பீட்டளவில் சிறிய அளவிலேனும் அனுஷ்டித்தார்கள்.

அது சிறிய அளவிலான நினைவு கூர்தல். மக்கள் மயப்பட்ட நினைவு கூர்தல் அல்ல. எனினும், அதற்குள் ஓர் எதிர்ப்பு உண்டு. சரியாகவோ அல்லது பிழையாகவோ தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அந்த இடத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அரசாங்கம் நினைத்திருந்தால் அதன் உபகரணங்களான பொலிஸ், நீதிமன்றம் போன்றவற்றுக்கூடாக அதைத் தடுத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு தடுத்து தமிழ் தலைவர்களைத் தியாகிகளாக்க அரசாங்கம் விரும்பவில்லை போலும்.

சாவகச்சேரியில் ஓரிடத்தில் அவர்கள் கொஞ்ச நேரம் குந்திக்கொண்டு இருந்துவிட்டுப் போகட்டும் என்று அரசாங்கம் சிந்தித்திருக்கலாம்.

எனவே, இப்பொழுது தமிழ் தரப்பு திலீபனை நினைவு கூர்ந்ததைப் போலவே மாவீரர் நாளையும் அனுஷ்டிக்கப் போகிறதா? அல்லது கூர்மையான வேறு அறவழிப் போராட்டங்கள் மூலம் தமது எதிர்ப்பைக் காட்டப் போகிறார்களா? அல்லது மெய்நிகர் தளத்தில் நினைவுகூர்தலை அனுஷ்டிக்கப் போகிறார்களா?

நினைவு கூர்தலை மக்கள் மயப்பட்ட ஒரு எதிர்ப்பாக முன்னெடுப்பதில் இங்கே ஒரு அடிப்படைப் பிரச்சினை உண்டு என்பதை இக்கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. என்னவெனில், கொவிட்-19 சூழலை முன்வைத்து அரசாங்கம் நினைவு கூர்தலைத் தடுக்கும் நிலைமைகள் அதிகமுண்டு.

சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புக் காட்டுவதை அல்லது ஒன்றுகூடி நினைவு கூர்வதை எப்படியாவது தடுக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு சட்டம் வேண்டும். கொவிட்-19 இற்கு முன்பு வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்தது. புனர்வாழ்வு என்ற ஒரு விவகாரத்தைக் காட்டி பல்கலைக்கழக மாணவர்களை வெருட்டக் கூடியதாக இருந்தது. கொவிட்-19 இற்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டங்கள் வந்துவிட்டன.

கடந்த ஓராண்டு காலமாக தமிழ் எதிர்ப்பைத் தடுப்பதற்கு அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி வருகிறது. கடந்த மே பதினெட்டை நினைவுகூர்ந்த போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களைப் பொலிஸ் தரப்பு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தண்டிக்க முற்பட்டது. அதாவது, தனிமைப்படுத்தலை ஒரு தண்டனையாகப் பிரயோகிக்க முற்பட்டது. எனினும், தமிழ் சட்டவாளர்கள் கட்சி பேதங்களைக் கடந்து ஒற்றுமையாகப் போராடி நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார்கள்.

முன்பு பயங்கரவாதத் தடைச் சட்டம். இப்பொழுது தனிமைப்படுத்தல் சட்டம். எல்லா சட்டங்களின் நோக்கமும் தமிழ் மக்களின் கூட்டு வெளிப்பாட்டை எப்படித் தடுக்கலாம் என்பதே. எனவே, இங்கு தடுத்தல் என்பது ஓர் அரசியல் தீர்மானம். அதற்கு எதிரான நகர்வுகளும் அரசியல் போராட்டங்களாகவே இருக்க வேண்டும்.

கொவிட்-19 சூழலுக்குள் அதை எப்படி புத்திசாலித்தனமாக சுகாதார வழிமுறைகளைப் பேணியபடி முன்னெடுக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். தனிமைப்படுத்தல் சட்டத்துக்குள் சிக்காமல் அதை எப்படிச் செய்வது என்று சிந்திக்க வேண்டும். புதிய நோய்த் தொற்று சூழலுக்குள் அதை எப்படி ஒரு புதிய வடிவத்தில் முன்னெடுப்பது என்று சிந்திக்க வேண்டும்.

இதுவிடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கடந்த பத்தாண்டு கால பரப்பில் ஒரு வாழும் முன்னுதாரணம் உண்டு. அதுதான் சிவாஜிலிங்கம். அவரைப் பலர் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால்தான் அவருக்கு தேர்தல்களில் கிட்டத்தட்ட பத்தாயிரம் வாக்குகளே கிடைகின்றன.

ஆனால், கடந்த முறை செஞ்சோலைப் படுகொலை நினைவு கூரப்பட்டபோது பெரும்பாலான தரப்புக்கள் ஒடுங்கிப் போயிருந்த ஒரு சூழலில் சிவாஜிலிங்கம் துணிச்சலான ஒரு முன்மாதிரியைக் காட்டினார். அதற்கு முன்னரும் அவர் அப்படிச் செய்திருக்கிறார்.

அவரிடம் ஒரு முச்சக்கர வண்டியுண்டு. அதில் ஒரு வாளைத் தண்டு, சுட்டி, திரி, எண்ணை போன்றவற்றைத் தயாராக வைத்திருப்பார். பொலிஸார் எதிர்பாராத நேரத்தில் சில சமயம் எதிர்பாராத இடத்தில் வாளைத் தண்டை நட்டு விளக்கேற்றி விடுவார்.

‘அவரைப் போல மற்றவர்களும் துணிந்து முடிவெடுக்கக் கூடாது. அவரைப் பார்த்து நீங்களும் செய்தால் சிலசமயம் உங்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள்’ என்று ஒரு வழக்கறிஞர் முகநூலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் வழமை போல தனியாள் நினைவு கூரும் எந்திரமாகத் துணிச்சலாக செயற்பட்டிருக்கிறார். இதுவிடயத்தில் அவர் ஒரு தனியாள் பாரம்பரியத்தை ஓரளவுக்கு உருவாக்கியிருக்கிறார். ஏனைய தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களும் அரசியல் வாதிகளும் இதிலிருந்து கற்றுக் கொள்வார்களா?

மாவீரர் நாளன்று பொதுச் சுடரேற்றி ஒளிப்படக் கருவிகளுக்கு படம் காட்டுவதில் ஆர்வமாக காணப்படும் அரசியல்வாதிகள் இது விடயத்தில் சவாலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

மாவீரர் நாளையும் ஏனைய நினைவு கூரும் நாட்களையும் தமது வாக்கு வேட்டைக் களங்களாகக் கருதும் அரசியல்வாதிகள், இறந்தவர்களைக் காட்டி வாக்குத் திரட்டும் அரசியல்வாதிகள் இது விடயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினோம், அறிக்கை விட்டோம், துயிலும் இல்லத்தைத் துப்பரவாக்கினோம், கொடி கட்டினோம் என்று கூறி விட்டுத் தப்பப் போகிறார்களா?

கொவிட்-19 சூழலைக் கவனத்தில் எடுத்து நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்துவதில் வரையறைகள் இருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகள் அதைத் தாங்களாக முன்வந்து செய்வதில் வரையறைகள் இல்லை.

அதாவது, தனிப்பட முயற்சி செய்யலாம். தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உண்டு. நூற்றுக் கணக்கான பிரதேச சபை உறுப்பினர்கள் உண்டு. இதுதவிர முக நூலில் இரத்தக் கொதிப்பேறி ஆவேசமாக மோதும் ஆதரவாளர்கள் உண்டு. இவர்கள் அனைவரும் எப்படி நினைவு கூரப் போகிறார்கள்?

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

Breaking News

கிளிநொச்சி மாவட்டத்தில்நேற்று பெய்த கனத்தமழைபலபகுதிகள் வெள்ளத்தால்சூழ்ந்துள்ளது!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சிகள் எமது...

வடக்கில்–22 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...

புலிகள்அமைப்பை போன்று கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்!

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Don't Miss

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

வடக்கு-கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்

அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர்...