முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் இன்று கெிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வில் அன்னை பூபதியின் உருவப்படத்துடன், விடுதலைப்புலிகளின் பெண் புாராளிகளின் புகைப்படங்கள் அங்சலிக்காக வைக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்று பொலிசார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். இந்த நிலையில் இருவரிடமும் கிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதன்புாது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிடுகையில்,குறித்த தினத்தன்று மகளீர் தின நிகழ்வில் தானும், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவு்ம. அங்கு அன்னை பூபதியின் திரு உருவ படத்துடன், போராளிகள் சிலரின் படங்கள் அங்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்படும் ஒருவரால் தனது குடும்பத்தில் போராட்ட காலத்தில் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டதாகவு்ம, மீண்டும் இளைஞர்களை போராட்ட சிந்தனைக்குள் அழைத்து செல்லும் செயற்பாட்டில் இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் கிடைத்த தகவல்கள் போதாது என தெரிவித்த இன்று மீண்டும் எம்மை அழைத்து நீண்ட நேரம் வாக்குமூலம் பொலிசாரால் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களிற்கு குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here