முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம்

நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

குறித்த தீர்மானத்தில் நினைவாலயம் கிளிநொச்சி நகரப்பகுதியில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பசுமைப் பூங்காவில் அமைப்பதாகவும் இதன் பூர்வாங்கப் பணிகள் எதிர்வரும் மே 18 ஆம் திகதி ஆரம்பித்து அடுத்த வருடம் மே 18 ஆம் திகதி திறந்து வைப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது

இக் கட்டுமானப் பணிக்கு முதல் கட்டமாக தனது சொந்த நிதியில் இருந்து கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான ஜீவராஜா ஐந்து லட்சம் ரூபா காசோலையினையும் , ரஜனிகாந்த் ஒருலட்சம் ரூபா காசோலையினையும் இன்று தவிசாளரிடம் வழங்கி உள்ளனர் அதனை விட ஏனைய உறுப்பினர்களும் தமது மாத சம்பளத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்

குறித்த நினைவுத் தூபியின் அமைப்பு மொத்த செலவு போன்ற விடயங்கள் நாளை மூன்று மணியளவில் கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் வேழமாலிதன் தலமையில் ஆராயப்ப்பட உள்ளது

மேலும் குறித்த அமர்வில் இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யப்படமையும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here