பிரித்தானியா தொண்டர் நிறுவனம் இதுவரை 26 லட்சத்திற்கு  நிவாரணம்

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும்  எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம்  கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால்   முல்லைத்தீவு கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளந்த கூலி வேலை செய்யும் குடும்பங்கள் ,பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்,மாற்றுத் திறனாளிகள்  என அனைவரும்  அன்றாட உணவுக்கு அல்லல் படுகின்றமையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு நிவாரனப்பணியை ஆரம்பித்து

இதுவரை  இலங்கை ரூபா இருபத்தி ஆறு லட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட  உலருணவுப் பொதிகள் தயார் படுத்தப்பட்டு தர்மபுரம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா ஊடாக வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு  மாவட்டங்களில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட  1600இற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது
இதில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கே பெரும் பங்கு ஒதுக்கப்பட்டு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறுகிய காலத்தில் இருபத்தாறு லட்சத்திற்கும் அதிகமான நிவாரனப்பணியை குறித்த அமைப்பு வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு  மாவட்டங்களில் மட்டும் முன்னெடுத்துள்ளது அதனை விட அம்பாறை மாவட்டத்திலும் பல லட்சம் ரூபாவில் நிவாரனப்பணியை  செய்து வருகின்றது  குறித்த அமைப்பு மேலும் பல லட்சங்களுக்கான நிவாரணப்பணியை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக தற்போது இணைப்பாளராக பணியாற்றும் ஆலய தர்மகர்த்தா ஜீவராஜா தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here