கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க பிரதமர் இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வன வள பாதுகாப்பு  திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் காணிகளான   ஆணைவிழுந்தான் பகுதியில்  உள்ள 300 ஏக்கர் காணி மற்றும் ஜெயபுரம் பகுதியில் உள்ள 200 ஏக்கர் காணிகளையும் உடனடியாக விடுவிக்க நாட்டின் பிரதமர் மகிந்த ராயபக்ச நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்

இன்று ஐந்து  முப்பது மணியளவில் விஜயராம மாவத்தையில் உள்ள நாட்டின் பிரதமர்  மகிந்த ராஜபக்ச அவர்களின் வீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் கொரோனா தாக்கத்திற்கு சுய சார்பு பொருளாதாரம் பொருத்தமானது  என அடிக்கடி கூறுகின்றீர்கள் கிளிநொச்சியில் ஐநூறு ஏக்கர் வயல் காணி  தடுத்து நிறுத்தப்பட்டு  வன வள பாதுகாப்பு  திணைக்களத்தின் கீழ் உள்ளது இதனை விடுவிக்க கோரி பல முறை விண்ணப்பங்கள் செய்த போதெல்லாம் பல காரணங்கள் கூறப்பட்டது எனவே இவ்வாறு வயல்கள் முடக்கப்பட்டுள்ள போது எவ்வாறு சுய சார்பு பொருளாதாரம் முன்னேடுப்பது எனவே குறித்த காணிகளை விடுவித்து தருமாறு முன்வைத்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here