கிளிநொச்சியில் நிவாரண பணிக்காக   பல லட்சம் ஒதுக்கீடு

கிளிநொச்சியில் நிவாரண பணிக்காக   எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம் பல லட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளது பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் குறித்த அமைப்பு தாயகத்தில் வாழ்வாதார செயற்திட்டங்கள் ,மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு ,போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை தரமுயர்த்துதல் போன்ற செயற்பாடுகளை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம் இதன் தொடர்ச்சியாக

  கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் கிளிநொச்சியிலும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளந்த கூலி வேலை செய்யும் குடும்பங்கள் ,பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அன்றாட உணவுக்கு அல்லல் படுகின்றமையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு பல லட்சம் ரூபாவினை உலனருவுப் பொருட்கள் வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளது

இதன் ஆரம்பகட்டமாக  சுமார் ஐந்து இலட்சத்துக்கு மேலதிகமான அத்தியவசிய உணவுப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் குடும்பங்கள் மற்றும்  ,பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட  300 குடும்பங்களுக்கான உணவுப் பொதிகள் தர்மபுரம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா ஊடாக  நேற்றையதினம்    மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இன்றைய தினமும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட 300 குடும்பங்களுக்கான உலருணவுகள் குறித்த ஆலய தர்மகர்த்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதியிடப்பட்டு கிளிநொச்சியின் பல பாகங்களில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் குறித்த ஆலய தர்ம கர்த்தா கருத்து தெரிவிக்கையில்     எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனத்தினரால் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது  அவர்கள் தர்மபுரத்தில் உள்ள  எமது ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்  ஆலயமூடாக இவ் மக்கள் பணியை முன்னேடுத்ததினை இட்டும் இவ் மக்கள் பணியில் எமது சரீரப் பங்கும் இருப்பதனை இட்டு ஆத்ம திருப்தி அடைகின்றோம்

இவ் உதவிக் கரமானது காலத்தின் தேவை உணர்ந்து இவ் அமைப்பு செய்துள்ளது இதனை மிகவும் இவ் மாவட்ட மக்கள் சார்பாக மிகவும் நன்றியுடன் பார்க்கின்றோம் எமது ஆலயம்  உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு எமது ஆலயம் கடந்த ஐந்து வருடமாக தர்மகர்த்தா ஆகிய எனது சொந்த நிதியில் இருந்து  ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையும் இருநூற்று ஐம்பது பேருக்கு அன்னதானம் வழங்குவது வழமை ஆண்டவனின் துணையோடு இவ்வளவு காலமும் செய்து வந்தேன்  ஆனால்  நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொடிய நோயின் காரணமாகவும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் இவ் பணியை முன்னெடுக்கதுக்க முடியாது மிகவும் கவலையில் இருந்தேன் ஆனால்  கிளிநொச்சி மாவட்டம் எங்கும் இவ் உணவு பிரச்சனைக்கான சிறிய பங்கை முன்னெடுக்க கடவுள் எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம் ஊடாக வழிவகை செய்துள்ளான் இவ் உதவித் திட்டத்தை முன்னெடுக்கும் இவ் அமைப்பிற்கு எனது சிரம் தாழ்த்திய நன்றியை மீண்டும் பதிவு செய்வதோடு இப் பணியை  எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்க எல்லாம் வல்ல அந்த ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்  துணைநிற்க வேண்டுகின்றேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here