ஊரடங்கு விதிகளை மீறிய ஆறு பேர் கிளிநொச்சியில் கைது

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது பொலீஸ்  ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி நகர்ப்பகுதியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் இன்று கிளிநொச்சி போலிசாரால் கைது செய்யப்பட்டுளனர்

இன்று பிற்பகல் 7.00 மணியளவில் கிளிநொச்சி நகர்ப் பகுதியில் வைத்து குறித்த கைதுச் சமவம் இடம்பெற்றுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்கா கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தவறும் பட்சத்தில் கைது நடவடிக்கைகள் செய்ய ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here