ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில், நியூ சவுத் வேல்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, இம்மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-யை தாண்டியுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here