இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்  தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும்பொருட்டே இந்த நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவில்லை.

நேற்றிரவு 10 மணி முதல் மீள் அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பின் கொச்சிகடை பொலிஸ் துறை பிரிவுக்கு விடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டமும் அமுலில் இருக்கின்றது.

இந்நிலையிலேயே இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here