ஆடைத் தொழிற் சாலைகளை  மூடுமாறு கோரிக்கை


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற ஆடைத்தொழிற்சாலைகளை பணிகளை இடைநிறுத்தம் செய்து தருமாறு கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்

கொரணா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கோடு அரச விடுமுறை மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதித்த போதும் 15000 பேருக்கு அதிகமான பணியாளர்கள் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள ஆடைத் தொழிற் சாலையில் பணியாற்றி வருகின்ற நிலமையில் தொடர்ந்தும் குறித்த ஆடைத் தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றது 
எனவே இவற்றை உடனடியாக கருத்தில் எடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இரண்டு மாவட்ட அரச அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
என இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here