எல்லாவகையிலும் புறக்கணிக்கப்படும் கண்ணகி நகர் கிராமம்


எல்லாவகையிலும் புறக்கணிக்கப்படும் கண்ணகி நகர் கிராமம் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா குற்றச்சாட்டு
இன்று ஊடககங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்


குறித்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவாதாவது

கண்ணகி நகர் கிராம மக்கள் அனைத்து விதமான அபிவிருத்தி செயற்பாடுகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் மாவட்டத்திற்கு வரும் ஒதுக்கீடுகள் அனைத்தும் கிராம அலுவலர் பிரிவுகளுக்கு சமனாக பங்கிடப்படுகிறது  புன்னை நிராவி கிராம அலுவலர் பிரிவு  அதி கூடிய  கிராமங்களைக் கொண்டதுடன் அதிகூடிய குடும்பங்களையும் கொண்டுள்ளது அவ் கிராம அலுவலர் பிரிவில் அதிகூடிய மக்கள் வாழும் கிராமம் ஒன்று தான் கண்ணகி நகர் இதனால் ஒதுக்கீடுகள் குறைவாக கிடைப்பதனால் பங்கிடப்படும் போது கண்ணகி நகர் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யப்பட்டு வருவதனை அயல் வட்டார பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன் கரைச்சி பிரதேச சபைக்கு உட்ப்பட்ட பகுதி என்பதால் சபையினால் செய்யப்படுகின்ற வேலைகள் மாத்திரமே இதுவரை செய்யப்பட்டுள்ளது


கடற் தொழிலை பிரதான வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் குறித்த பகுதி மக்கள் சீரற்ற கால நிலைகளிலும் தொழிலை முன்னெடுத்து தமது பொருளாதாரத்தை உயர்ந்த பாடுபட்டுவருகின்ற போதும் அபிவிருத்தியில்  அவர்களை புறம்தள்ளப்பட்டே வருகிறது


அண்மையில் கூட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் இருபது லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை குறித்த கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராமங்களின் அபிவிருத்திக்கு பகிர்ந்தளித்துள்ளார் ஆனால் கண்ணகி நகர் கிராமத்திற்கு எவ்வித அபிவிருத்திக்கும் பணம் ஒதுக்கப்பட வில்லை குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுக்கு மக்கள் தெரிவித்த போதும் எதுவும் இதுவரை எந்த முயற்சியும் நடைபெறவில்லை

ஆகவே புன்னை நிராவி கிராம சேவையாளர் பிரிவில் உழவனூர்,புன்னை நீராவி,கல்லாறு,கண்ணகி நகர்,நாதன் திட்டம், குமாரசாமி புரம் என ஆறு பெரிய கிராமங்கள் உள்ளன மொத்தமாக 2200 குடுமபங்களை சேர்ந்த 7100 பேர் வரையில்  குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகிறார்கள் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்ப்பட்ட பிரதேசத்தில் அதிகூடிய குடும்பங்கள் வாழும் கிராம அலுவலர் பிரிவும் இதுவே இந்த கிராம அலுவலர் பிரிவில் அனைத்து செயற்பாடுகளும் திறம்பட நடைபெற வேண்டுமே ஆனால் குறித்த ஆறு கிராமங்களும் ஆறு கிராம சேவையாளர் பிரிவாக மாற்றப்பட வேண்டும் இல்லையேல் முதற்கட்டமாக ஆவது மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்ற வேண்டும் இதற்கு நாட்டினுடைய ஜனாதிபதி, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here