நெத்தலியாறு பால வேலைகள் இன்று ஆரம்பம் –
 மழை பெய்கின்ற போது ஏற்படுகின்ற வெள்ளம் காரணமாக நெத்தலியாறு பாலத்தின் ஊடாக  போதுமானளவு நீர் வெளியேறாது இருப்பது 


நெத்தலியாறு பாலம்  அமைக்கும் போதுமானளவு உயர்த்தப்படவில்லை என்றும், இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் செல்கிறது எனவும் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து இன்று பாலம் உயர்த்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


இது தொடர்பில் குறித்த வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா கருத்து தெரிவிக்கையில் அண்மையில் பாலத்தை உயர்த்துமாறு எமது பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தார்கள் அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன்

அதன் போது எமது மக்களின்  கோரிக்கை அடங்கிய கடிதம் பொது மக்களினால்  நாட்டின் ஜனாதிபதி மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,   ஆகியோருக்கு அனுப்பி இருந்தோம் அதன் பிரகாரம் பாலம் உயர்த்தும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது குறித்த பகுதி வாசி என்ற வகையிலும் குறித்த வட்டார பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையிலும் இதனை உடனடியாக உயர்த்த உழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் நாட்டின் ஜனாதிபதிக்கும் நன்றிகள் என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here