சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் பாடசாலை மாணவனுக்கு தாக்குதல்


கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு தன்னை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர் என்று  அடையாளப் படுத்திக் கொண்ட திருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த மாணவன் கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்


இன்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்ப பாடசாலை நுழைவாயிலில் இருந்து வெளியேறிய போதே குறித்த மாணவனுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது


குறித்த விடயம் தொடர்பில் மாணவனுடைய தந்தையாரை வினவிய பொழுது தனக்கும் குறித்த அரசியல் கடைக்கும் அரசியல் ரீதியான கருத்து முரண் இருப்பதாகவும் அதன் போது பல மாதங்களுக்கு முன்னர் தமது கட்சிக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் உமது குடும்பம் ஓர் முஸ்லீம் குடும்பம் எவ்வாறு கிளிநொச்சியில் வாழபோகின்றீர்கள் என அச்சுறுத்தியமைக்கு அமைவாக இன்று கணிதப்பிரிவில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் எனது மகனை தாக்கியுள்ளார்கள் கல்வியில் முதன்மை நிலையில் உள்ள மாணவர்களில் எனது மகனும் ஒருவர் அவரின் கல்வியை குழப்பும் முகமாக இவ்வாறான நடவடிக்கைகளை செய்து வருகின்றனர் எனது மகனுக்கு நடந்த அநீதி எவனுக்கும் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here