யேர்மனி நூரன்பேர்க் ஈழம் விளையாட்டுக்கழகம் மற்றும் நூரன்பேர்க் வாழ் தமிழர்கள் இணைந்து புதுவருடமான நேற்று வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்

வெள்ளத்தாலும் பொருளாதார கஸ்டத்தாலும் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்ல இடர்பாட்டில் உள்ள உடையார் கட்டு குரவில் பிரதேச மாணவர்களுக்கும் கரைச்சி பிரதேச மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் உள்ள பொருளாதார கஷ்டத்துடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கும்
தலா 2000ரூபா பெறுமதியான கற்றலுக்கான பல்வேறு பொருட்கள் அடங்கிய கற்றல் உபகரணப் பொதிகளை கரைச்சி பிரதேச மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் வைத்து யாழ் எய்ட் ஊடாக நேற்றைய தினம்(01.01.2020 வழங்கி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here