காணாமல் போனோர் அனைவரும் இறந்து விட்டதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பது புறம்பானது . ஜனாதிபதி கூறுவதற் மைய காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அதற்கு யார் பொறு பாளிகள் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் யாழ் . மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் . சிவஞானம் சிறீதரன் சபையில் கேள்வி எழுப்பினார் . காணாமல் போனவர்கள் , சரணடைந்த வர்கள் இராணுவத்தின் பிடியில் இருக்கும் ஆதாரங்கள் பல இருக்கின்ற போதும் எப்படி அவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கூற முடியுமெனவும் அவர் கேள்வியெழுப் பினார் .

https://youtu.be/KHwAOvWRpqE

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சின் 9 ஒழுங் குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரை யாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சிறீதரன் மேலும் உரையாற்றுகையில் , காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக ஐ . நா . வதிவிடப் பிர திநிதி ஹனா சிங்கருடன் சனிக்கிழமை நடந்த சந்திப்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக கடந்த திங்கட் கிழமை தமிழ் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது . முள்ளிவாய்க்காலில் வவுனியாவில் இராணுவத்திடம் பெற்றோரால் , கணவர் களை இழந்த மனைவிமார்களால் , பிள் ளைகளால் , சகோதரர்களினால் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனவர்கள் எப்படி இறந்திருக்க முடியும் . அப்படி இறந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ? உங்களிடம் ஒப்படைத்த பிள்ளைகள் , கணவர்மார் , மனைவிமார் , சகோதரர்கள் எங்கே எனக் கேட்கும் உறவுகளுக்கு அரசின் பதில் என்ன ? காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என ஜனாதிபதி கோத் தபாய ராஜபக்ஷ கூறி அடிப்படையற்ற தன்மையை வெளிக்காட்டுகின்றார் . நீதிக்கு புறம்பாக செயற்படுகின்றார் . யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த இவரே தமிழினப் படுகொலைகளுக்கும் சிறுவர்களை பட்டினி போட்டுக்கொன்றதற்கும் தமிழர்கள் காணாமல் போன தற்கும் காரணமானவரென குற்றம் சாட்டப் பட்டவர் . தற்போது கூட மிருசுவிலில் 8 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவரை சத்தமின்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார் . எனவே இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் . தமிழர்களின் விடுதலைப்  போராட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்ததில் ஐ . நா . வுக்கும் மனித உரிமைகள்  ஆணையகத்துக்கும் பெரும் பங்குண்டு . எனவே தமிழர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க இவர்களுக்கு பொறுப்புண்டு . இல் லாது விட்டால் உலகில் நீதி மறுக்கப்பட்ட இனமாக தமிழர்கள் இருப்பார்கள் . தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக் காத ஐ . நா . வும் . மனித உரிமைகள் ஆணை யகமும் வேறு நாடுகளில் இப்படி அநீ திகள் நடக்கும்போது எப்படித் தலையிட முடியும் ? காணாமல் போனவர்கள் தொடர்பில் அப்படிப்பட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லையென ஜனாதிபதியினால் கை விரிக்க முடியாது . காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் . ஜனாதிபதியின் இந்தக் கூற்றை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here