உரிமையற்ற அபிவிருத்தி எமக்கு அழிவுகளையே தரும் எச்சரிக்கிறார் சிறீதரன் எம்.பி
தமிழர்களின் உரிமையையும் சுதந்திரத்தனையும் பறித்து விட்டு தருகிற அபிவிருத்தி எமக்கு அழிவுகளையே தரும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பாரதிபுர மக்களுடனான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.  அங்கு கருத்து தெரிவிக்கையிலைலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழர்கள் இந்த மண்ணிலே சம உரிமையுடனும் சம அந்தஸ்துடனேயே வாழ விரும்புகிறோம்  என்பதையே தமிழ் மக்கள் கடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் தெளிவாக கூறியிருக்கிறார்கள் இதைச்சிங்களத்தலைவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேணடும் அண்மையில் இந்த அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் தமிழர்களுக்கு சோறு தான் முக்கியம் என எள்ளிநகையாடும் வகையில் கருத்து தெரிவித்தார் எமது இனத்தின் விடுதலைக்காகவே கந்தகம் சுமந்தும் இரவு பகலாக சரியான வேளை உணவு கூட உண்ணாமல் களங்களில் சமராடி உயிர் திறந்தவர்கள் இவர்களின் தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்தும் வகையில் அவரின் கருத்துக்கள் உள்ளன. உரிமை அற்ற அபிவிருத்தியினால் எந்தவகையான பிரயோசனமும் இல்வை என்பதற்கு கடந்ந ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நடந்த விடயங்கள் மிகச்சிறந்த உதாரணமாகும் . அப்போது இஸ்லாமிய சகோதரர்களில் எத்தனை அமைச்சரகள்  இருந்தார்கள் அத்துடன் விசேட அதிரடிப்படையினருக்கு பொறுப்பாகவும் லத்தீப் என்பவரே பொறுப்பாக இருந்தார் அவர்களால் தங்கள் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எதுவும் செய்ய இயலாதவர்களாய் இருந்தார்கள் அவ்வாறே எமக்கும் நிகழும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்  தெரிவித்தார்குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜீவராசா, சிவகுமார், கட்சியின் பிரதேச அமைப்பாளர்  சுபாஸ் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here