கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் 100ஆவது ஆண்டை முன்னிட்டு 100 பானைகளில் பொங்கல் வைத்து விசேட பொங்கல் விழா

கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் 100ஆவது ஆண்டை முன்னிட்டு 100 பானைகளில் பொங்கல் வைத்து விசேட பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தில் இன்று காலை பொங்கல் விழாவும், இரணைமடு நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.


வடமாகாணத்திலுள்ள மிகப்பெரிய குளமான இரணைமடு நீர்தேக்கம் புனரமைக்கப்பட்டு நூற்றாண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இந்நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.


இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகான முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here