இன்ஸ்டாகிராமின் புதிய வசதிகள்!

இன்ஸ்டாகிராமின் புதிய வசதிகள்!

இன்ஸ்டாகிராமின் புதிய வசதிகள்!

இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ள புதிய வசதிகள் மூலம் உங்களது பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்தவகையில், இன்ஸ்டாகிராம் செயலியின் புது வசதி மூலம் Your Activity எனும் அம்சம் வழங்கப்படுகிறது.

இந்த அம்சம் கொண்டு இன்ஸ்டாகிராம் செயலியை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்ற விவரங்களை துல்லியமாக அறிய முடியும்.

அதுமட்டுமன்றி தினமும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களும் இதன் மூலம் வழங்கப்படுகிறது.

இவற்றுடன் Push Nortification களை மியூட் செய்யும் அம்சம் வழங்கப்படுகிறது. எனினும் Mute செய்யும் வசதி சிறிது நேரத்திற்கு மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது வசதிகளை இயக்க விரும்பும் பயனர்கள் தங்களது ப்ரோஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இனி ஹேம்பர்கர் Icon ஐ அழுத்தினால் ‘Your Activity’ அம்சம் காணப்படும்.

இதனை கிளிக் செய்ததும் நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சாதனத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செயலியை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்ற விவரங்களை பார்க்கமுடியும்.

டாஷ்போர்டின் கீழ் தினசரி Reminder செட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தியதும், நீங்கள் செட் செய்த காலம் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம்.

பின் அந்த நாளுக்கான நேரம் நிறைவுற்றதும், இன்ஸ்டாகிராம் உங்களுக்கு நினைவூட்டும். எனினும், இந்த தெரிவை எந்நேரமும் நிராகரிக்கவோ அல்லது மாற்றியமைக்கவும் முடியும்.

இதேபோன்று Nortification Setting சென்றால் Mute Push Nortification Setting காணப்படும்.

இதை செயல்படுத்தியதும், இன்ஸ்டாகிராம் Nortification நீங்கள் விரும்பும் சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தப்படும்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts