ஃபேஸ்புக் பதிவுகளுக்கு தானாக கருத்துக்களை வழங்கும் புதிய வசதி!

ஃபேஸ்புக் பதிவுகளுக்கு தானாக கருத்துக்களை வழங்கும் புதிய வசதி!

ஃபேஸ்புக் பதிவுகளுக்கு தானாக கருத்துக்களை வழங்கும் புதிய வசதி!

ஃபேஸ்புக் வலைதளத்தில் நீங்கள் கடந்து வரும் பதிவுகளுக்கு தானாக கருத்துக்களை (Comments) பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து போகும் பதிவுகளுக்கு (Post) ஃபேஸ்புக் சார்பில் Comments பரிந்துரை செய்யப்படும்.

குறிப்பிட்ட பதிவுகளின் அர்த்தத்தை தானாக புரிந்து கொள்ளும் ஃபேஸ்புக் மென்பொருள் அதற்கு பொதுவான கமென்ட்களை பரிந்துரை செய்யும். அதன் பின் அதனை பதிவிட நீங்கள் ஒற்றை கிளிக் செய்தாலே போதுமானது.

தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் கூகுளின் ஜி-மெயில் சேவையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் Reply அம்சத்தை போன்றதாகும்.

எனினும் ஃபேஸ்புக்கில் சோதனை செய்யப்படும் புதிய வசதி போஸ்ட்களை தானாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற கமென்ட்களை பரிந்துரை செய்யும்.

நேரலை வீடியோக்களில் பயனர்கள் கண்டறிந்த புதிய அம்சம் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

இந்த புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தள பயன்பாட்டை அதிகரிக்க முடியும். எனினும், இந்த போஸ்ட்களில் பிழை ஏற்படுத்தும் டூல்கள் பயன்படுத்தாமல் இருப்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts