வவுனியா பிரதான வீதியில் விபத்து! ஒருவர் பலி!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு இராணுவத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற கொள்கலன் லொறியொன்றும், பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தொன்றும் ஒன்றுடனொன்று மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில், இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், லொறியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்து வருகிறது.

பகிர்வதற்கு