நீண்ட நாட்களுக்குப் பின்னர் இயக்குனராக டி.ராஜேந்தர்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பல்முக திறமைகளை கொண்ட டி. ராஜேந்தர், தற்போது, 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திற்கு “இன்றைய காதல் டா” என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

குறித்த படத்தில் நடிகை நமீதா பெண் தாதாவாக நடிக்கிறார். இவருடன் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் என அனைத்தையும் ஆகிய பொறுப்புகளை டி.ராஜேந்தரே ஏற்றுள்ளார்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் உஷா ராஜேந்தர் தயாரிக்கும் இந்த படத்திற்கு “இன்றைய காதல் டா” என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. படத்தின் தலைக்கேற்ப இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற இளமை சொட்டும் காதல் கதையாக படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்வதற்கு