கிளிநொச்சியில் வலம்புரிச் சங்குடன் இருவர் கைது!

நேற்று இரவு கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்தபொழுது டொல்பின் ரக வாகனத்துடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் கிளிநொச்சி பொலிசார் மூலம் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த இருப்பதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் மீட்க்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன் இது இடம்புரி சங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன இருந்த போதும் வலம்புரிசங்கை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் கடத்த முயன்றமை என்றே விசேட அதிரடிப்படையினர் இன்று வழக்குத்தாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது

பகிர்வதற்கு