கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையில் விபத்து! தரம் மூன்று மாணவி பலி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் உமையாள்புரம் அதக பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி உயிரிழந்துள்ளார்.

பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்

இன்று காலை ஏழு பதினைந்து மணியளவில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார்.

இதன் போது பாதசாரிகள் கடவையை குறித்த மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது.

உடனடியாக குறித்த வாகனத்திலேயே மாணவியை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றிருந்த போதும் மாணவி உயிரிழந்து விட்டார்.

உயிரிழந்த மாணவி குடும்பத்தில் ஒரேயொரு பெண் பிள்ளை ஆவார். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை பொலீஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகனசாரதியையும் கைது செய்துள்ளனர்

பகிர்வதற்கு