மழையால் வெள்ளக்காடான கேரளா! இதுவரை 26 பேர் பலி!

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயங்களுக்கும் உள்ளாகியிருக்கும் அதேவேளை, கேரளா முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முழுவதும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக மழை பெய்தவண்ணம் உள்ளது.

இதில் வெள்ளம் மற்றும் இடி, மின்னல், புயல் என்பவற்றின் தாக்கம் காரணமாக மேற்படி உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளது.

இந்நிலையில், அங்குள்ள ஆறுகள் நதிகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுவதால், கேரளாவின் பல மாநிலங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

அதிலும் பெரியாறு நதிகரையோரத்தில் வெள்ளத்தின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உயிரிழப்புக்களும் அதிகமாகவே உள்ளது.

எனவே அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி குடியேறுமாறு வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மீட்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் வீதிகளிலும் வெள்ளம் மற்றும் உடைப்புகள் ஏற்பட்டுள்ளமையினால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயிர்கள் முற்றாக அழிவுக்குள்ளாகி உள்ளதோடு விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு