கருணாநிதியின் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, மெரினா கடற்கரையின் அண்ணா சமாதிக்கருகில் கருணாநிதியின் உடலை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அடக்கம் செய்யும் இடத்தை பார்வையிட்டு அதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கு, துரைமுருகன், எ.வேலு உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு நடத்தியிருந்தனர்.

அவர்களுடன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும் ஆய்வில் கலந்துகொண்டதுடன், இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா சதுக்கத்தின் பின்புறமாகவுள்ள பகுதியில், அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதுடன், குறித்த பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு