இத்தாலியில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

20 தொன் நிறையுடைய போதைப் பொருட்களை எரிபொருட் தாங்கியில் மறைத்துக் கடத்திச் சென்ற கப்பலொன்றினை இத்தாலி கடற்படையினர் நேற்று  (வியாழக்கிழமை) கைப்பற்றியுள்ளனர்.

பனாமா நாட்டுக் கொடியினை பறக்கவிட்டவாறு இத்தாலி கடற்பரப்பின் ஊடாக குறித்த கப்பல் பயணித்த சந்தர்ப்பத்தில், இவ்வாறு போதைப்பொருள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 200 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலில் இருந்த 11 பேரும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மொன்டெகுரோவைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கடத்தலுடன் துருக்கி மற்றும் எகிப்திற்கு தொடர்புகள் இருக்கலாமெனவும், வட ஆபிரிக்காவிற்கு கடத்துவதற்கு முயற்சித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பகிர்வதற்கு