அண்ணா சமாதிக்கருகில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி!

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பூதவுடலை சென்னை மெரீனா கடற்கரையில், அண்ணா சமாதிக்கருகில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மெரீனா கடற்கரையில் இடம் வழங்க முடியாதென தமிழக அரசு குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கெதிராக தி.மு.க. சார்பில் நேற்று மாலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டிருந்த நிலையில், மெரீனா கடற்கரையில் கலைஞரின் பூதவுடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் இடம் வழங்குவதில் சட்ட சிக்கல் காணப்படுவதாக குறிப்பிட்டே தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்திருந்தது.

அவற்றை விளக்குமாறு தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிரகாரம் இன்று காலை தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதனை ஆராய்ந்த நீதிமன்றம், கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய எந்த சட்டச் சிக்கலும் இல்லையென தெரிவித்து, அதற்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டது.

பகிர்வதற்கு