திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி வளைவு உடைப்பு: நடந்தது என்ன?

திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி வளைவு உடைப்பு: நடந்தது என்ன?

திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி வளைவு உடைப்பு: நடந்தது என்ன?… வளைவை அனுமதிக்க வேண்டாமென குருமுதல்வர் பொலிசில் கோரிக்கை!

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவை கத்தோலிக்கர்கள் நேற்று மாலை அடித்துடைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

அந்த பகுதியில் ஏற்கனவே வளைவொன்று நீண்டகாலமாக இருந்து வருகிறது. அது துருப்பிடித்து, பழுதடைந்ததையடுத்தே நேற்று மாலை அந்த இடத்தில் புதிய வளைவு அமைக்கப்பட்டது.

அந்த வளைவு அமைக்கப்பட்டுள்ள வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது.

வளைவு அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதிக்கடிதம் வழங்கியுள்ளது. இந்த நிலையிலேயே, கத்தோலிக்கர்கள் வளைவை அடித்து நொறுக்கியுள்ளனர்.

வங்காலை பங்குத்தந்தை மார்க்ஸ் அங்கு நின்றார். அவரை தவிர வேறு பாதிரியார்களும் அங்கு நின்றார்கள். அவர்களின் கண்முன்னேயே வளைவு அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த அநாகரிக செயல் குறித்து, மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லமோ அல்லது பொறுப்பான வேறு யாருமோ பொறுப்பான பதில் வழங்காதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, சிவராத்திரி விரதம் முடியும் வரை அந்த வளைவை அமைக்க அனுமதிக்க வேண்டாமென மன்னார் குருமுதல்வர் விக்டர் சூசை பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“அந்த வளைவு சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சரன நீண்டநாளாக நிலவுகிறது.

நேற்று நிரந்தர வளைவு அமைக்க முயற்சிக்கப்பட்டது. அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ளது அதை அங்குள்ள மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர் அங்கு வளைவு அமைப்பதற்கு ஏற்கனவே ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி விரதம் அமைதியாக நடைபெற வேண்டும். சிவராத்திரி முடியும் வரை, நிரந்தர வளைவு அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொலிசாரிடம் கோரியுள்ளோம். அங்கு நந்திக் கொடியும் நட்டுள்ளனர்.

அதற்கு நாம் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. நிரந்தர வளைவு அமைப்பது தொடர்பில் இரண்டு தரப்பும் பேச்சு நடத்துவோம்’ என தெரிவித்தார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts