கள்ளக்காதல்!! கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை வெட்டிய கணவன்!

கள்ளக்காதல்!! கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை வெட்டிய கணவன்!

கள்ளக்காதல்!! கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை வெட்டித் துண்டாடிய கணவன்!

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை  செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் வந்த பின்னரே முழுமையான தகவல்களைப் பெறமுடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு  அந்த நபரை வெட்டியுள்ளார்.

வெட்டுக்காயத்துக்குள்ளான நபர் மு.ப. 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மு.ப. 10 மணிக்கு மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

அவரை வெட்டிய நபர் கிளிநொச்சிப் பொலிஸில் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என தகவல் வழங்கப்பட்டுள்ளது” என்று மேலும் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர்.

காப்புறுதி முகாமையாளர் எனவும்  பல பெண்களுடன் தொடர்புவைத்திருப்பர் எனவும் தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts