ஒன்றோடு ஒன்றாய் ஒன்றித்துப்போன கூட்டமைப்பினர்?

ஒன்றோடு ஒன்றாய் ஒன்றித்துப்போன கூட்டமைப்பினர்?

ஒன்றோடு ஒன்றாய் ஒன்றித்துப்போன கூட்டமைப்பினர்?

யாழ்ப்பாணத்தில் தற்போது தமிழ் சிங்களமெல்லாம் நல்லிணக்கத்துடன் கூட்டமைப்பின் புண்ணியத்தில் ஓடத்தொடங்கியுள்ளது.

அதிலும் தமிழ் மக்கள் மட்டும் வாழும் மூளாய் பிரதேசத்தில் சஜித் பிரேமதாச தனது தந்தையாரான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா பாணியில் தனிச்சிங்களத்தில் பதாகை வைத்து நிகழ்வு நடத்தியுள்ளார்.

தனது அமைச்சின் கீழான வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண நிகழ்விலேயே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,சித்தார்த்தன்,சுமந்திரன்,சிறீதரன் மற்றும் சரவணபவன் சகிதம் குறித்த பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளது.

அதே வேளை மைத்திரி,ரணில்,விசயகலா சகிதம் கூட்டமைப்பினரையும் இணைத்ததுடன் அரசில் கூட்டமைப்பு பங்காளிகள் என்பது அம்பலமாகியுள்ளது.

இதனிடையே அரசினால் வைக்கப்பட்ட பதாகையொன்றில் தனது படம் வெளிவந்திருந்த நிலையில் அதனை சிறீதரன் அவசர அவசரமாக மறைத்திருந்தார்.

எனினும் பதாகை தொடர்பில் அவர் இன்னமும் அதனை மறைக்க முற்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts