இலங்கையில் செல்பியால் சிக்கிய கஞ்சா தோட்டம்!

இலங்கையில் செல்பியால் சிக்கிய கஞ்சா தோட்டம்!

இலங்கையில் செல்பியால் சிக்கிய கஞ்சா தோட்டம்!

செல்பி எடுத்ததால் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்பி எடுத்தமைக்காக அல்ல, அந்த செல்பியில் தெரிந்த கஞ்சா செடி காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய பொலிசாராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எடுத்த செல்பியில், அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் தெரிந்தன. இதையடுத்தே, அவர் கஞ்சா வளர்ப்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் சுமார் 8 அடி உயரமான 115 கஞ்சா செடிகள் இருந்துள்ளன.

செல்பியில் கஞ்சா தெரிந்ததை, அவரது நண்பர் வட்டத்திலிருந்த யாரோ பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்தே, அவர் கைதானார். 30 வயதான அவர் நேற்று வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts