பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாராம்!

பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாராம்!

பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாராம்!

நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இத்தகைய போதைப் பொருள் கடத்தல்கள், விற்பனைகள் என்பன எமது பகுதிகளில் இருக்கவில்லை. இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்போது ஆளுந்தரப்புடன் இணைந்து அரசியல் நடத்தத் தொடங்கினார்களோ,

அன்று முதலே இத்தகைய போதைப் பொருள் கடத்தல்களும், கேரள கஞ்சா கடத்தல்களும், வாள்வெட்டுச் சம்பவங்களும், சமூக அவலங்களும் எமது பகுதிகளில் அதிகரித்துள்ளன என்பதை அங்கு வாழுகின்ற எமது மக்கள் அறிவார்கள்.

எமது நாட்டில் இன்று ஊழல் மோசடிகள் என்பது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயமாக மாறியுள்ளது. இவ் ஊழல்களை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டும், அதன்பின்னர் அவைகளில் பல விசாரிக்கப்படாமலும் நிரூபிக்கப்படாமலும் கூட இருக்கின்றன.

எனக்கு எதிராகக் கூட கௌரவ சுமந்திரன் அவர்கள் பிரதமர் காரியாலயத்தில் செயற்பட்ட ஊழல் மோசடிப்பிரிவில் 2015 ஆம் ஆண்டு முறைப்பாடு செய்து ஊடகங்களை அழைத்து அரசியல் வியாபாரம் செய்தார். ஆனால் இதுவரை அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டனவா?

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோவில்’ பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாரம்.

சட்டத்தரணியாகச் செயற்படுவது கஞ்சாவிற்பனையாளர்களையும் பாலியல் குற்றவாழிகளையும் காப்பாற்றுவதற்காகவா அல்லது நீதியின் குரலாக செயற்படுவதற்காகவா?

இவரது கட்சி சட்டத்தரணிகள் பாலியல் குற்றவாழிகளை கஞ்சா வியாபாரிகளை ஊழல் மோசடிகாரர்களை சமூக விரோதிகளை விடுவிப்பதிலேயே முன்னின்று செயற்படு வருகின்றனர்.

இன்றும்கூட ஏதோ கேரள கஞ்சாவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினரொருவருக்கும் தொடர்பு இருப்பதாக ஏதோ ஒரு பொய்யினை அவர் இந்தச் சபையிலே கூறியிருக்கிறார்.

கேரள கஞ்சா கடத்தல் தொழில்களில் ஈடுபடுகின்ற சிலர் கிளிநொச்சி பொலிஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரை விடுவித்துக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உயரதிகாரி ஒருவருக்கு அழுத்தங் கொடுத்தார் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

அதைப் பற்றி நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கதைத்தபோது, உடனே எழுந்திருந்த அவர், வேறோர் கதையைக் கூறி, அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார்.

இன்று, ஈ.பி.டி.பி கட்சிக்கும், கேரள கஞ்சாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றார். ஆக, இவர் இந்த கேரள கஞ்சாவை கைவிட மாட்டார் போல் தெரிகின்றது.

கேரள கஞ்சாவைக் கடத்தித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. எமது பகுதிகளில் போதைப் பொருள் உட்பட இந்த கேரள கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை அடியோடு நிறுத்த வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோரைக்கூட விடுவிப்பதற்கும் இதே தமிழ்த் தேசியத் தரப்பினரே பொலிஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் முன்நிற்கின்றனர் என்பதையும் எமது மக்கள் அறிவார்கள்.

எனவே, எமது மக்களுக்குத் தெரியும், போதைப் பொருள், கேரள கஞ்சா போன்றவற்றின் கடத்தல்கள் மற்றும் விற்பனைக்கு யார் துணைநிற்கின்றார்கள் என்பது. அதனால்தான் இவர்களது தமிழ்த் தேசியம் என்பது கேரள கஞ்சாவைப் போன்றது என எமது மக்கள் கதைத்து வருகின்றனர்.

(நாடாளுமன்றில் நடைபெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், அரசு சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணை செயலகத்தின் ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் 2019.02.06 ஆந் திகதி கலந்துகொண்டு உரையாற்றுகையில்)

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts