பாகிஸ்தானுக்கு முடிவு கட்ட தயாரான இந்தியா!

பாகிஸ்தானுக்கு முடிவு கட்ட தயாரான இந்தியா!

பாகிஸ்தானுக்கு எதிராக இறங்கிய இஸ்லாமியர்கள்! பாகிஸ்தானுக்கு முடிவு கட்ட தயாரான இந்தியா!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 41 வீரர்கள் வீரமரணம் அடிந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசு தரப்பிலும் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி பதிலடி கொடுக்க ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில், புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

உருவ பொம்மைகளை எரித்த அவர்கள், தீவிரவாதத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். வளையல்களை கைகளில் ஏந்திய அவர்கள், மத்திய ரிசர்வ் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது என முழக்கமிட்டனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts