நுண்கடன் நிறுவனங்களை அடித்து விரட்டுவோம்!

நுண்கடன் நிறுவனங்களை அடித்து விரட்டுவோம்!

நுண்கடன் நிறுவனங்களை அடித்து விரட்டுவோம்; மார்ச் 31ம் திகதிக்கு பின் இயங்க முடியாது: ஜனாதிபதியின் சகோதரர் அதிரடி!

“நுண்கடன் நிறுவனங்களை நாட்டிலிருந்து அடித்து விரட்ட வேண்டும். அதற்கு நான் தலைமையேற்க தயாராக இருக்கிறேன்.

நாட்டின் முன்னோடி மாவட்டமாக, பொலன்னறுவையிலிருந்து அவர்களை அடித்து விரட்டி காட்டுகிறேன்.

மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் சகல கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்திக் கொண்டு அவர்கள் வெளியேற வேண்டும்“

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் டட்லி சிறிசேன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், நாட்டின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான டட்லி சேனநாயக்க இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

“நாட்டிலுள்ள அதிகமான மக்கள் நுண்கடனாளிகளாக உள்ளனர். 75 வீதத்திற்கும் அதிகமான வட்டியை செலுத்த முடியாமல் போனதும், பாலியல் இலஞ்சம் கோருவது அடுத்து நடக்கிறது. அப்பாவி மக்களை சூறையாடும் முறையே இது.

நாட்டின் பொலிஸ்மா அதிபர் சிறந்த நடிகராக, பாடகராக, நாட்டியக்காரராக, இந்த பொறுப்பையும் ஏற்க வேண்டும். கடனை செலுத்த முடியாதவர்கள் தயவுசெய்து பொலிசாரிடம் முறையிடுங்கள்.

எனது கடன்தொகை ஒரு செக்கனிற்கு 37.64 சதம் வட்டி செலுத்துகிறேன். எனது கடனை என்னால் செலுத்த முடியாதென்று அல்ல. ஆனால், ஜனாதிபதியின் தம்பியென்பதால், தமது வீடுகளை மீட்க என்னிடம் உதவி கோருகிறார்கள்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் இதில் தலையிட்டு நுண்கடன் வழங்குபவர்களை அடித்து விரட்ட வேண்டும். நான் தலைமையேற்ற தயாராக இருக்கிறேன்.

சிலநாட்கள் நான் வெளிநாடு செல்கிறேன். நுண்கடன் நிறுவனங்களிற்கு காலக்கெடு வழங்குகிறேன். மார்ச் 31ம் திகதிக்குள் உங்கள் கொடுக்கல் வாங்கல்களை முடித்துக் கொள்ளுங்கள்.

இலங்கையின் முன்னோடி மாவட்டமாக பொலன்னறுவயிலிருந்து நுண்கடன் நிறுவனங்களை அடித்து விரட்டுவதை தலைமைதாங்குவேன் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்“ என்றார்.

இதேவேளை, தேர்தல் ஒன்று நடந்தால் நாட்டின் 25 மாவட்டங்களிலும் சுயாதீனமாக போட்டியிட்டு தம்மால் வெற்றியீட்ட முடியுமென்றும் தெரிவித்தார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts