தமிழ் இளைஞன் – முஸ்லிம் பெண் காதல் திருமணம்: நிர்க்கதியான பெண்

தமிழ் இளைஞன் – முஸ்லிம் பெண் காதல் திருமணம்: நிர்க்கதியான பெண்

தமிழ் இளைஞன் – முஸ்லிம் பெண் காதல் திருமணம்: நிர்க்கதியான பெண்

வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் கர்ப்பிணி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழ் இளைஞனும் முஸ்லிம் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டதன் பின்னர் ஏற்பட்ட விவகாரமே மனித உரிமை ஆணைக்குழு வரை சென்றுள்ளது.

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய 27 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் அவ்வியாபார நிலையத்தின் உரிமையாளரின் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மகளை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.

பெற்றோர்கள் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று தெரிந்துகொண்ட இருவரும் கடந்த நவம்பர் மாதம் புஸ்ஸல்லாவ பகுதிக்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து சில காலம் தங்கிவிட்டு அண்மையில் வவுனியாவுக்குத் திரும்பினர்.

இதனிடையே, வவுனியா வியாபார நிலையத்தின் உரிமையாளர், தனது மகளை வியாபார நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புஸ்ஸல்லாவயில் தங்கியிருந்த இருவரும் அங்குள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக தாம் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், இருவரும் எவருடைய வற்புறுத்தலின்றி இணைந்து வசித்து வருவதாகவும் முற்கூட்டியே முறைப்பாடு செய்தனர்.

புஸ்ஸல்லாவ பகுதி பொலிஸ் நிலையத்தினூடாக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு இந்தத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வவுனியா வர்த்தக நிலையத்தின் உரிமையாளருடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இதனால் குறித்த இளைஞனுக்கு நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிஸார் எவ்வித தகவல்களையும் இளைஞனின் தரப்பினருக்கு வழங்கவில்லை. இந்நிலையில் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞன் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண் நிர்க்கதியானார்.

இந்நிலையில் வவுனியா பொலிஸார் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவித்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு நீதியைப் பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts