சம்பந்தனிற்கு ‘அரைமனது’! கூட்டமைப்பு- வெளிநாட்டு தூதர்கள் சந்திக்க திட்டம்!

சம்பந்தனிற்கு ‘அரைமனது’! கூட்டமைப்பு- வெளிநாட்டு தூதர்கள் சந்திக்க திட்டம்!

சம்பந்தனிற்கு ‘அரைமனது’! கூட்டமைப்பு- வெளிநாட்டு தூதர்கள் சந்திக்க திட்டம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கும், வெளிநாட்டு தூதர்களிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றிற்கு முன்னாயத்த பணிகள் நடந்து வருகின்றன.

இந்த வார இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

கனடா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் தூதர்களை சந்தித்து பேசுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் திட்டம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வேறுபட்ட அப்பிராயங்கள் நிலவுவதால், எம்.பிக்களை சமரசப்படுத்தும் விதமாக, அனைத்து எம்.பிக்களும் தூதர்களை சந்திப்பதென முடிவானது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த திட்டத்தை பரிந்துரைத்தார்.

எனினும், இந்த திட்டத்தில் இரா.சம்பந்தனிற்கு உடன்பாடில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

ஐ.நா விவகாரம், அரசியலமைப்பு மற்றும் கூட்டமைப்பின் முக்கிய கொள்கை முடிவுகளை இதுவரை இரா.சம்பந்தன், தனக்கு நெருக்கமான ஓரிருவருடன் மட்டுமே பேசி எடுத்து வந்தார்.

இந்த நிலையில், இம்முறை கூட்டமைப்பு எம்.பிகள் கூட்டாக வெளிநாட்டு தூதர்களை சந்திக்கும் திட்டத்தை அவர் விரும்பவில்லை. இந்த விவகாரம் பேசப்பட்டபோதே, அது தேவையற்றது என்ற சாரப்பட அவர் பேசினார்.

இந்த சந்திப்பு அவசியமற்றது என்ற கருத்திலேயே அவர் தொடர்ந்தும் உள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமான மூலங்களின் வழியாக அறிந்துள்ளது. அதனால், 18ம் திகதி சந்திப்பு இடம்பெறுமா என்பதில் குழப்பம் உள்ளது.

அதேவேளை, 18ம் திகதி சந்திப்பிற்கு தூதர்கள் தரப்பிலிருந்து இன்று மாலை சம்மதம் தெரிவிக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts