காலையில் இராணுவம்:மாலையில் கடற்படை!

காலையில் இராணுவம்:மாலையில் கடற்படை!


வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக சந்திப்புக்களில் முனைப்பாகியிருக்கின்ற நிலையில் இன்று மாலை இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எம் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு இன்று (20) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

முன்னதாக காலை யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி அவரை தேடிச்சென்று சந்தித்துள்ளார்.

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இராணுவ தளபதிக்குமிடையேயான சந்திப்பு இன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கடந்த வாரம் கண்டியில் பௌத்த மத பீட தலைவர்களையும் கொழும்பில் இந்திய தூதரையும் அவர் சந்தித்துள்ளார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts