ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்களிற்கு ஆளுனர் இராப்போசன விருந்து!

ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்களிற்கு ஆளுனர் இராப்போசன விருந்து!

ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்களிற்கு ஆளுனர் இராப்போசன விருந்து!

வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நேற்று சம்பிரதாய நிமித்தமான ஈ.பி.டி.பி அமைப்பின் பிரமுகர்களிற்கு இராப்போசன விருந்தளித்தார்.

ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் பிரதானிகள் என சுமார் 15 பேரளவில் ஈ.பி.டி.பி தரப்பிலிருந்து கலந்து கொண்டதாக அறிந்தது.

வடக்கு ஆளுனராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரை சம்பிரதாய முறைப்படி டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து, நேற்று ஆளுனர் இராப்போசன விருந்திற்கு அழைத்திருந்தார்.

தனது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆளுனர் இதன்போது குறிப்பிட்டார். பெண்கள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டதை போல, கல்விக்குழு, முதியோர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி அமைப்பின் சார்பில் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்ததால்- அதில் அதிகமானவர்கள் இளநிலை அரசியல்வாதிகள் என்பதால், தம்முடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்ற விவகாரங்களை பற்றியே அதிகம் ஆளுனரிடம் முறையிட்டனர்.

நெடுந்தீவு பிரதேசசபை உபதவிசாளர் நியமிக்கப்படாதது, யாழ் முதல்வர் மாநகரசபை நிதியில் விலையுயர்ந்த அப்பிள் மடிக்கணினி கொள்வனவு செய்தது, மாநகரசபை தீர்மானங்கள் பல சபைக்கு தெரியாமல் எடுக்கப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள்.

எனினும், அரசியல் குற்றச்சாட்டுக்களில் ஆளுனர் அவ்வளவாக அக்கறை காண்பிக்கவில்லையென கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்தபோது, அதற்கான தீர்வையும் முன்வைக்கும்படி ஆளுனர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பேருந்து சேவை கிராமங்களிற்கு கிடைக்காததை சுட்டிக்காட்டியபோது, அதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள் என ஆளுனர் வினவினார். பிரச்சனையை சொன்ன உறுப்பினர் பின்னர் தனது தீர்வு யோசனையை சொன்னார்.

இதேபோல, முல்லைத்தீவில் பல வீதிகள் அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டது. “வீதிகள் அமைக்ககல் இல்லாமல் உள்ளது, ஒட்டுசுட்டான் தட்டய மலையை உடைத்து கல் எடுக்கலாம், நீங்கள் (அரசியல்வாதிகள்) எதிர்க்காமல் இருந்தால்.

எதிர்ப்பை வரவிடாமல் செய்தால், இராணுவத்தை கொண்டே கல் உடைப்பிப்பேன்“ என்றார் ஆளுனர்.

தட்டயமலையில் கல் உடைக்கப்படுவதற்கு எதிராக வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கு எதிராக உள்ளூரில் தொடர் போராட்டங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts