ரெலோவின் வெருட்டலை இவ்வளவு காமெடியாகவா எடுத்தார் சம்பந்தன்?

ரெலோவின் வெருட்டலை இவ்வளவு காமெடியாகவா எடுத்தார் சம்பந்தன்?

ரெலோவின் வெருட்டலை இவ்வளவு காமெடியாகவா எடுத்தார் சம்பந்தன்?

“புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவின் அறிக்கையை நாம் கவனமாகவும், நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில், அதை நிராகரிப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை“

இப்படியொரு பரபரப்பு அறிக்கையை, வெகு சாதாரணமாக மிக அண்மையில் ரெலோ விடுத்திருந்தது.

அரசியல் தீர்வு முயற்சிகளில் வெளிப்படை தன்மையில்லாதது, கூட்டமைப்பிற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதா? பங்காளியொன்றே நிராகரித்தால், கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? இப்படி சமூக வலைத்தளங்களில் பலரும், மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் பலரும் அப்படித்தான் மண்டையை உடைத்திருக்கிறார்கள் போல தெரிகிறது. ஏனெனில், கடந்த 26ம் திகதி கொழும்பில் நடந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலும் இந்த விடயம் எதிரொலித்தது.

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்து இரா.சம்பந்தன் அன்றைய கூட்டத்தில் விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது, தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் சிலர், ரெலோ நிராகரித்து விட்டதே அடுத்து என்ன நடக்கும் என கவலையாக கேட்டுள்ளனர்.

சம்பந்தர் மிக நிதானமாக சொன்னார்- அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என.

“அந்த அறிக்கை வந்ததும் செல்வத்துடன் பேசினோம். ஒரு பிரச்சனையும் வராது. ஜனநாயகமுறைப்படி இயங்கும் கட்சிகளிற்குள் இப்படி பலவித கருத்துக்கள் வரும்தானே, அதை எதிரொலிக்க வேண்டிய தேவை தலைவர்களிற்கு உள்ளது.

அதை செய்தார். அவ்வளவுதான். வெறெந்த சிக்கலும் வராது என அவர் சொல்லியிருக்கிறார்“ என மிக “கூலாக“ சம்பந்தர் பதிலளித்தாராம்.

கடைசியாக, கேள்வி கேட்ட பிரமுகர்களை ஒரு பார்வை பார்த்து, நமுட்டு சிரிப்பு சிரித்தாராம்.

அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?

இத்தனைகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள், ரெலோவை நாடிபிடித்து பார்க்க தெரியாமல் இருக்கிறீர்களே என்பதாக இருக்குமோ?

ஏனெனில், இப்படி பல அதிரடி, அதிர்ச்சி, பரபரப்பு தீர்மானங்களையெல்லாம் ரெலோ எடுத்து விட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதெனில், நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் என சிலவற்றை ரெலோ, அரசியல் உயர்பீடம் எடுத்தது.

ஆனால், அப்படியெதுவும் இல்லாமலே, கட்சியின் இரண்டு எம்.பிக்களும் (செல்வம், கோடீஸ்வரன்) ஆதரவளித்தனர்.

உள்ளூராட்சி தேர்தல் ஆசன பங்கீட்டில், “இந்தா கூட்டமைப்பு உடைகிறது“ என்பதை போல ஒரு சீன் காட்டினார்கள்.

ஒக்ரோபர் அரசியல் குழப்பத்தின் போது, ரணிலுக்கு ஆதரவளிப்பதென்றால், நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என சிலவற்றை அரசியல் உயர்பீடம் தயாரித்து, சம்பந்தனிற்கு அனுப்பினார்கள். அந்த ஆவணம் இப்பொழுது எங்கேயென யாருக்கும் தெரியாது.

கட்சியின் அரசியல் உயர்பீடம், தலைமைக்குழு என இருக்கும் கட்டமைப்புக்கள் ஒரு தீர்மானம் எடுப்பதும், அந்த தீர்மானத்திற்கு மாறாக கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் கையை உயர்த்துவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்த வரலாறு தெரியாமல், இந்த பிரச்சனைகளையெல்லாம் ஒரு சீரியஸான பிரச்சனையாக நினைத்து, இங்கே கொண்டு வந்திருக்கிறீர்களே என்பதாக இருக்குமோ?

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts