ரணிலை கைது செய்யத் தயாராகும் மைத்திரி!

ரணிலை கைது செய்யத் தயாராகும் மைத்திரி!

ரணிலை கைது செய்யத் தயாராகும் மைத்திரி!

2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்தாண்டு வரையான காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள், அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமைத் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விசாரணை ஆணைக்குழு 2010ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள மோசடிகள், முறைகேடுகள் குறித்த முன்னெடுத்த விசாரணை அறிக்கையானது கடந்த 2ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்ச பதவிகளை வகித்தவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதா தெரிய வருகிறது.

கடந்த ஆட்சியின் போது மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியில் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி பல தடவைகள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்மைய காலப்பகுதியில் மத்திய வங்கி விவகாரத்துடன் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கவுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், அதன் காரணமாக பிரதமர் பதவியை பறித்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னணியில் ரணிலை கைது செய்தும் நோக்கில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts