மாயமான தமிழரை கைது செய்ய பொது மக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

மாயமான தமிழரை கைது செய்ய பொது மக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

மாயமான தமிழரை கைது செய்ய பொது மக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

32 வயதான Brampton-பகுதியை சேர்ந்த மாயமான தமிழரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில், பிரம்டனில் சான்டல் வூட் பார்க்வே (Sandalwood Parkway) மற்றும் எடன்ன்ப்ரூக் ஹில் டிரைவ் (Edenbrook Hill Drive) சந்திப்பிலுள்ள வீடு ஒன்றினை பிராந்திய பொலிஸ் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சோதனையில் கொக்கெய்ன் (cocaine), 10,000 டொலர் ரொக்கமும், இரண்டு துப்பாக்கிகளையும் மற்றும் பல்வேறு வெடிமருந்துகளையும் குறித்த பகுதியில் கைப்பற்றினர்.

இது தொடர்பாக,சந்தேகத்தின் அடிப்படையில் பிரம்டன் நகரை சேர்ந்த 32 வயதான ஜோனார்த்தன் தங்கராஜாவை (Jonnarthan Thangarajah) கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்கராஜா சாம்பல் லெக்ஸஸ் RX5 எஸ்.யூ.வி (year 2017) ஒன்றிலேயே நகருக்குள் திரிவதாகவும் அந்த வாகனத்தின் உரிம இலக்க தகடு CDZJ 357 எனவும் பொலிசார் அடையலாம் தெரிவித்துள்ளனர்.

இதில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை தொடர்பு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய (905) 453-2121, 2133. 1-800-222-TIPS (8477) இல் அல்லது www.peelcrimestoppers.ca என்ற தளத்திலும் தகவல்களை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts