நியூசிலாந்திற்கு படகில் புறப்பட்ட 100 தமிழர்கள்: 11 நாளாக தொடர்பு துண்டிப்பு!

நியூசிலாந்திற்கு படகில் புறப்பட்ட 100 தமிழர்கள்: 11 நாளாக தொடர்பு துண்டிப்பு!

நியூசிலாந்திற்கு படகில் புறப்பட்ட 100 தமிழர்கள்: 11 நாளாக தொடர்பு துண்டிப்பு!

நியூசிலாந்தில் புகலிடம் கோருவதற்காக, கேரள மாநிலத்தின் முன்னம்பலம் துறைமுகத்திலிருந்து கடல்வழியாக சட்டவிரோதமாக பயணித்த நூற்றிற்கும் மேற்பட்ட தமிழர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் போயுள்ளது.

கடந்த 12ம் திகதி இவர்களின் பயணம் ஆரம்பித்தபோதும், இதுவரை அவர்கள் எந்த நாட்டு கரையையும் அடையவில்லை.

கேரள மாநிலத்தின் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து பெரிய நாட்டு படகில் கடந்த 12ம் திகதி இவர்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். நூற்றிற்கும் அதிகமான தமிழர்கள் இதிலிருந்தார்கள்.

இந்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, கேரள பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அவர்களின் சோதனையில், அகதிகளை ஏற்றியபடி, பெரிய மீன்பிடி படகு புறப்பட்ட இடத்தில் 70 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த பொதிகளில், நீண்ட பயணத்திற்கு தேவையான பொருட்கள் இருந்தன. அத்துடன் 20 அடையாள ஆவணங்களும் அங்கிருந்து மீட்கப்பட்டன.

அதனடிப்படையில் விசாரணை செய்த பொலிசார், பிரபு தண்டாயுதபாணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையிலேயே பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீன்பிடி படகில் சட்டவிரோதமாக பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் இருந்தே வந்தனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஈழத்தமிழர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருந்து, கேரளத்திற்கு வந்துள்ளனர். அதேபோல, டெல்லியில் இருந்தும் ஈழத்தமிழர்கள் சிலர், அந்த படகிற்கு வந்துள்ளனர். 100 தொடக்கம் 200 வரையானவர்கள் படகில் இருந்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகளும் இருக்கிறார்கள். படகில் பயணிக்கும் பெரும்பாலானவர்கள் ஈழத்தமிழர்கள்.

12ம் திகதி புறப்பட்ட படகு, நடுக்கடலிற்கு சென்றதன் பின்னர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. படகு புறப்பட்ட கேரளாவில் இருந்து நியூசிலாந்திற்கு செல்ல 7,000 மைல்கள் கடல் பயணம் செய்ய வேண்டும். அந்த பாதை மிக ஆபத்தானதும் கூட.

இந்த காலப்பகுதியில், அந்த கடல் மார்க்கத்தில் கடுமையான சூறாவளி, கடல்கொந்தளிப்பு இருக்குமென கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தோனேசியாவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் கடுமையான கடல் கொந்தளிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

2000ஆம் ஆண்டுகளின் பின்னர் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து புகலிடம் கோரும் பயணங்களை மேற்கொண்ட இலங்கையர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள், நடந்த சம்பவங்கள் பற்றிய எந்த தகவலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts