திருவாரூரில் தேர்தல் நடக்குமா நடக்காதா???

திருவாரூரில் தேர்தல் நடக்குமா நடக்காதா???

திருவாரூரில் தேர்தல் நடக்குமா நடக்காதா??? தேர்தல் ஆணையமே நடத்தலாமா வேண்டாமா என்று கேட்பது ஏன்???

20 தொகுதிகளும் காலியான தொகுதிகளாக அறிவிக்கப்பட்ட பிறகு, திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனியாகத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த உத்திரவிட்டுள்ளது குறித்து, “ELECTION: திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல்!!! திமுகவை ஒழிக்க பாஜகவின் மாஸ்டர் பிளான்!!!” என்ற தலைப்பில் டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு வெளிவந்த அன்றே எழுதியிருந்தோம்.

3ம் தேதி, காவேரி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் பொங்கல் பண்டிகை வருவதால் திருவாரூர் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரி போட்ட PETITION மீது, தேர்தல் ஆணையம், “சட்டப்படி தொகுதி காலியானவுடன் 6 மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடத்தியாக வேண்டும் என்பது விதி.

ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கலைஞர் மறைந்ததால், பிப்ரவரி 7க்குள் தேர்தல் நடத்த வேண்டும்” என்று சொன்ன வாதத்தை ஏற்று சென்னை HIGH COURT தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்திரவிட்டது. என்ன ஒரு கடமை உணர்ச்சி!!!

இதைச் சொன்ன இதே தேர்தல் ஆணையம்தான், மழை வருகிறது, இன்னும் பட்டியல் எடுக்கவில்லை போன்ற சொத்தைக் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தலை இத்தனை வருடங்களாக நடத்தாமல் விட்டு வைத்திருக்கிறது.

ஏன் இதே தேர்தல் ஆணையம் இதே காரணத்தைக் கூறி, 18 தொகுதி MLA-க்கள் வழக்கை விரைந்து முடிக்கச் சொல்லியிருக்கலாமே.

இதை மட்டுமா சொன்னார்கள், “நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால், தமிழ்நாடு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்துவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம்” என்றும் தெரிவித்து, அதன்படி நேற்று நிவாரணப் பணிகளுக்கு அனுமதியும் அளித்துவிட்டது.

அதோடு தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை மீது மக்களுக்கு இருந்த மொத்த நம்பிக்கையும் தகர்ந்ததுவிட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகக் களம் இறங்குகிறார்கள் என்பதோடு, திமுகவைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் ஜெயிக்க வைக்க எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

சரி, ஆனால் திடீரென்று அவர்களே பின்வாங்குவது எதனால் என்று கேட்டால், அங்குதான் இருக்கிறது விஷயமே!!! R.K.நகர் திமுக தோல்வியால் திமுக பலவீனமடைந்து விட்டது என்ற நம்பிக்கையின் காரணமாகப் போடப்பட்ட வியூகம், திமுகவே எதிர்பாராத வகையில் கலகலத்துப் போனதுதான் காரணம்.

போட்டியிலிருந்தால்தானே குற்றம் சொல்வார்கள் என்று நல்லபிள்ளையாக பாஜக ஒதுங்கிக் கொள்ள, திமுக கேட்காமலேயே மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் என்று அனைவரும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க, திமுகவை பலவீனமான கட்சி என்று காட்டப் போடப்பட்ட திட்டத்திலேயே ஓட்டை விழும் சூழ்நிலை உருவானது.

அதுவுமில்லாமல், கலைஞருக்கு இரண்டு முறையும் பெரும் வெற்றி பெற்றுத் தந்த பூண்டி கலைவாணனை ஸ்டாலின் களம் இறக்குவார் என்பதை அவர்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள்.

கலைஞரின் தொகுதி என்பதால் ஸ்டாலின் அல்லது உதயநிதி இறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கியதன் காரணமாக திமுக முன்னை விடவும் அதிக வலிமை பெற்று நிற்கிறது.

அது மட்டுமல்ல, வழக்கமாகப் பணம் பெற்றுக் கொண்டதாலேயே கட்சி மாறி வாக்களிப்பவர்களின் சதவீதம் அதிகபட்சம் 10 சதவீதம்தான். மற்றவர்கள் என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் அவர்களின் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

இந்த பத்து சதவீத மாறுதல்தான் வெற்றி தோல்வியை மாற்றி எழுதும். EVM TAMPERING செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அதிகபட்சம் 5-லிருந்து பத்து சதவீதம்தான் செய்ய முடியும். காரணம், முந்தைய தேர்தல்களில் தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பெற்ற வாக்குகள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதற்கு ரொம்பவும் கீழே போனால், தேர்தல் ஆணையத்தின் ஆணையத்தின் குட்டு அப்பட்டமாக வெளிப்பட்டுவிடும்.

ஆக, தற்போது இரண்டு புறமும் சுருக்கு வைத்துக் கொண்டு நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாலேயே தேர்தல் ஆணையம் எதையாவது சாக்காகச் சொல்லி தேர்தலை தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு மத்தியிலிருந்து பச்சைக் கொடியும் கிடைத்துவிட்டது போல.

அதனால்தான் இன்று மாலைக்குள் தேர்தல் நடத்தும் சூழ்நிலையிருக்கிறதா, இல்லையா என்று விசாரித்து பதில் சொல்ல வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுப் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகபட்சம் இன்று மாலையோ அல்லது நாளைக் காலையே தேர்தல் தள்ளி வைப்பு அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் வீண் குற்றச்சாட்டு கூறுகிறேன் என்று சொல்லுவதற்கு முன் யாராக இருந்தாலும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுக் கூறுங்கள்.

திருவாரூர், இடைத்தேர்தலை நடத்தும் சூழ்நிலையில் இருக்கிறதா இல்லையா என்பதை விசாரிக்க வேண்டியது, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரா அல்லது பின்னரா???

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts