கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலத்தை, தோண்டியெடுக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலத்தை, தோண்டியெடுக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலத்தை, தோண்டியெடுக்க வேண்டும்.

ஒன்பது வயதான சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சிறுமியின் உடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் கொலை செய்ய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறிய காவல்துறையினர், அது குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டனர்.

அத்துடன் குறித்த சிறுமியை அவரது தாயும், தாயின் கள்ளக் காதலரும் இணைந்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் 26 வயதானவர் என்றும், அவரது கள்ளக் காதலர் 30 வயதானவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

வவுனியா – செட்டிக்குளத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய், தமது கணவரைப் பிரிந்து, ஹாலிஎலவில் உள்ள கள்ளக் காதலருடன் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டதுடன், அவரது கள்ளக் காதலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .

இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கிய சிறுமியின் தாய், தனது தங்கையிடம், ஐந்து வருடங்களுக்கு முன்னர் மகளை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts