ஒரு இலட்சம் வாழ்வாதார உதவிக்கு 15ஆயிரம் இலஞ்சம்: பூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தர் கைது!

ஒரு இலட்சம் வாழ்வாதார உதவிக்கு 15ஆயிரம் இலஞ்சம்: பூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தர் கைது!

ஒரு இலட்சம் வாழ்வாதார உதவிக்கு 15ஆயிரம் ‘சம்திங்’: கையும்மெய்யுமாக சிக்கினார் பூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தர்!

பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்கு இலஞ்சமான பணம் பெற்றுக்கொண்ட பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கையும் களவுமாக அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அதிகாரியே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

பூநகரி பிரதேசசெயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் ஒருவர், பயனாளிகளிற்கான வாழ்வாதார உதவிக்காக இலஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.

ஒரு இலட்சம் ரூபாவிற்கான காசோலையை வழங்கும்போது, 15,000 ரூபா பணம் இலஞ்சமாக கோருகிறார் என பயனாளி ஒருவரால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள தேனீர்கடையில் வைத்தே, அபிவிருத்தி உத்தியோகத்தர் பெற்றுக்கொள்வார் என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், பொலிசாரும் கொழும்பிலிருந்து வந்திருந்தனர்.

நேற்று இலஞ்சப்பணம் வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தேனீர்கடையில் சிவில் உடையில், தேனீர் பருகுபவர்களை போல அதிகாரிகள் இருந்தார்கள்.

குறிப்பிட்ட பயனாளி அங்கு காத்திருந்தார். அதிகாரி கடைக்கு வந்து இலஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அதை இரகசியமாக படம் பிடித்துக் கொண்டார்கள்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் இலஞ்சம் வாங்கியதற்கான ஒளிப்பட ஆதாரத்தை அதிகாரிகள் பெற்றதால், ஊழியர் வசமாக சிக்கிக் கொண்டார்.

இந்த பெண் உத்தியோகத்தர் நீண்டகாலமாக திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.

சில மாதங்களின் முன்பாகவே, பூநகரி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts