இணை அனுசரணையை இலங்கை கைவிடும்?

இணை அனுசரணையை இலங்கை கைவிடும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம்: இணை அனுசரணையை இலங்கை கைவிடும்?

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையை விலக்கிக் கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனீவாவில் மார்ச் மாதம் ஐ.நா அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தனது இணைஅனுசரணையை விலக்கிக் கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஐ.நா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க வேண்டாம் என, அப்போது ஐ.நாவிற்கான இலங்கை வதிவிட பிரதிநிதியாக இருந்த, அப்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த ரவிநாத் ஆரியசிங்க கேட்டுக் கொண்டதாகவும், எனினும் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அந்த ஆலோசனையை புறக்கணித்து இணை அனுசரணை வழங்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில், மங்களவை தொடர்புகொள்ள முயன்றபோதும், அது பலனளிக்கவில்லையென அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts