அய்யப்பன் பக்தர்கள் சென்ற வேன் விபத்து! 10 பேர் பலி!

அய்யப்பன் பக்தர்கள் சென்ற வேன் விபத்து! 10 பேர் பலி!

புதுக்கோட்டை அருகே அய்யப்பன் பக்தர்கள் சென்ற வேன் – கன்டெய்னர் லாரி மோதி விபத்து: 10 பேர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அய்யப்பன் பக்தர்கள் 15 பேர் பயணம் செய்த வேனும் கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

கோயிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்டெய்னர் லாரி பாதை மாறி சென்றதால் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts